தமிழ்நாடு வாணிப கழகத்தின் மூலம் இயங்கி வரும் மதுபானக்கடை அரசின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை மற்ற நாட்களை விட கூடுதலாக இருக்கும். இந்நிலையில் அனைத்து மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி குவார்ட்டர் ஒன்றுக்கு ரூ.10, ஆஃப் - ரூ.20, ஃபுல் ரூ. 40 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பீரின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதல் வருவாயாக 2200 கோடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் பண்டிகை தினங்களில் மட்டும் 606 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது. கடந்த 2017 அக்டோபரில் மதுபான விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.