ETV Bharat / state

விஜயகாந்த் உடல்நலம் எப்படி இருக்கிறது? - வீடியோ வெளியிட்ட பிரேமலதா! - சென்னை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து அவரது மனைவி பிரேமலதா சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜயகாந்த் உடல்நலம் எப்படி உள்ளது
விஜயகாந்த் உடல்நலம் எப்படி உள்ளது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 10:20 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சளி, இருமல் மற்றும் தொண்டை வலி காரணமாக மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 18ஆம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து கடந்த நவ.23ஆம் தேதி மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டது.

  • கேப்டன் நலமாக இருக்கிறார். விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, நம் அனைவரையும் சந்திப்பார்.

    - திருமதி. பிரேமலதா விஜயகாந்த் pic.twitter.com/P9iHyO7hzG

    — Vijayakant (@iVijayakant) November 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், இன்று (நவ. 29) மதியம் மியாட் மருத்துவமனை நிர்வாகம் திடீரென வெளியிட்ட அறிக்கையில், "விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து அவரது மனைவி பிரேமலதா வெளியிட்ட வீடியோ பதிவில், "தேமுதிக சொந்தங்களுக்கும், கேப்டன் மீது அன்பு வைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இன்று காலை மருத்துவமனை நிர்வாகம் கேப்டன் உடல்நலம் குறித்து வெளியிட்டது வழக்கமான அறிக்கை தானே தவிர அதில் பயப்படவோ, பதற்றப்படவோ தேவையில்லை.

கேப்டன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். மருத்துவர்களுடன் செவிலியர்களும், நானும் அவரை நல்ல முறையில் கவனித்து வருகிறோம். வெகு விரைவில் தலைவர் அவர்கள் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பி உங்கள் அனைவரையும் சந்திப்பார் என்பதை தெரிவித்து கொள்கிறேன். அனைவரது பிரார்த்தனையும் அவரது தர்மமும் நிச்சயம் அவரை காப்பாற்றும்.

கடை கோடியில் இருக்கும் தொண்டர்களும், நிர்வாகிகளும் பயப்பட வேண்டாம். நான் அவருடன் இருந்து கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்கிறேன். அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவது எப்போது என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம். அதுவரை யாரும் எந்த வித வதந்திகளையும் நம்ப வேண்டாம். தலைவர் நன்றாக இருக்கிறார்" என அந்த வீடியோவில் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை அறிக்கை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.