ETV Bharat / state

மழைநீர் வடிகால் பணிகள்... முன்னெச்சரிக்கை தடுப்புகளை வைக்க வேண்டும்... இறையன்பு கடிதம்...

மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை தடுப்புகளை வைக்குமாறு வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பி உள்ளார்.

மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை தடுப்புகளை வைக்க வேண்டும் - தலைமைச் செயலாளர் கடிதம்

author img

By

Published : Oct 26, 2022, 10:57 AM IST

சென்னை: இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், “பருவமழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில், பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கும், பாதசாரிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வேறு சில வேலைகளுக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளும், பள்ளங்களும் மூடப்படாமல் இருந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் (பேரிகாட்) மற்றும் அடையாள பலகைகள் வைக்க வேண்டும்.

சாலைகளில் மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள Manual Cover திறந்திருப்பின், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் தடுப்புகள், அடையாள பலகைகள் ஆகியவற்றை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை - ககன் தீப் சிங் பேடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.