ETV Bharat / state

’காத்திருந்தால் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு அப்பாவு உதாரணம்’ - குவியும் வாழ்த்துகள் - g k mani byte

சென்னை: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு குவியும் வாழ்த்துகள்

author img

By

Published : May 12, 2021, 6:47 PM IST

Updated : May 12, 2021, 10:52 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் எம்எல்ஏ அப்பாவு இன்று (மே.12) பதவியேற்றுக் கொண்டார். துணை சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி பதவியேற்றுக் கொண்டார். இருவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவை முடிந்தபின் கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பேட்டியளித்தனர்.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு குவியும் வாழ்த்துகள்

'விவசாயிகளின் கோரிக்கைகளை கொண்டு செல்வேன்'

அப்போது பேசிய திருத்துறைப்பூண்டி சிபிஐ எம்எல்ஏ மாரிமுத்து, "நான் வேட்பாளராகப் போட்டியிடும்போது என்னை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. தமிழ்நாட்டின் கடைகோடியில் இருக்கும் தொகுதியில் இருந்து வந்துள்ளேன். சாதாரண விவசாய மக்களின் கோரிக்கைகளைப் பற்றி பேச வந்துள்ளேன். மக்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நான் பயன்படுத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

'சிறந்த பேரவைத் தலைவரை தமிழ்நாடு பெற்றுள்ளது'

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கூறும்போது, "பேரவைத் தலைவராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைக்கே தீர்ப்பளிக்கும் பொறுப்பில் அவரை அமர வைத்து, சிறந்த பேரவைத் தலைவரை தமிழ்நாடு பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் எங்களைப் போன்றவர்களுக்கு பல முறை வாய்ப்பு மறுக்கப்பட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டுள்ளோம். நீதியோடு செயல்படும் சிறந்த தலைவர் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு நன்றி. காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் யார் என்பது குறித்து விரைவில் கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். ஏற்கனவே சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். எங்கள் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதனைக் கேட்டு நாங்கள் நடந்து கொள்வோம்" எனக் கூறினார்.

'மேலை நாடுகளுக்கு நம் மரபுகளை கொடையாக அளித்துள்ளோம்'

விசிக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை கட்சித் தலைவருமான சிந்தனைச் செல்வன் கூறும்போது, "விசிக நான்கு உறுப்பினர்களைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சட்டப்பேரவைக் கட்சி என்ற மதிப்பை விசிக பெற்றுள்ளது. பேரவைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அப்பாவுக்கும், துணைத் தலைவர் கு.பிச்சாண்டிக்கும் வாழ்த்துகள். சட்டப்பேரவையின் இரண்டு நாள் நடைமுறைகள் மிகுந்த வியப்பளிக்க கூடியதாகவும், நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது. இந்த ஜனநாயக மரபுகளை மேலை நாடுகளில் இருந்து பெற்றிருப்பதாகக் கூறுகின்றனர். நாம் தான் இந்த மரபுகளை மேலை நாடுகளுக்கு கொடையாக அளித்துள்ளோம். சட்டப்பேரவைத் தலைவராக அப்பாவுவை தேர்ந்தேடுத்த முதலமைச்சருக்கு நன்றி" என்றார்.

'காத்திருந்தால் எதுவும் நடக்கும் என்பதற்கு அப்பாவு உதாரணம்'

கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி ஈஸ்வரன் கூறும்போது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுபவமிக்க அப்பாவுவை சபாநாயகராக அறிவித்து, சபாநாயகர் இருக்கையில் அமர செய்துள்ளார். எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் இந்த ஐந்து ஆண்டு காலத்தை சிறப்பாக நடத்துவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என சபாநாயகர் கூறினார். காத்திருந்தால் எதுவும் நடக்கும் என்பதற்கு அப்பாவு உதாரணம். அதனால் இந்த சட்டப்பேரவையில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.

'அடிப்படையில் அவர் ஒரு ஆசிரியர்'

பாமக சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறும்போது, "ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவைத் தலைவருக்கு நாங்கள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம். அப்பாவு அடிப்படையில் ஒரு ஆசிரியர், தமிழ்நாடு சட்டப்பேரவையின் பெருமையை நிலை நிறுத்தும் வகையில் இருவரும் செயல்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

Last Updated : May 12, 2021, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.