ETV Bharat / state

'முன்பைவிட 100 மடங்கு வேகத்தில் இந்தி திணிப்பு நிகழ்கிறது’: மொழிப்போர் தியாகிகள் நினைவுதினத்தில் கொந்தளித்த வைகோ - chennai district news

சென்னை: முன்பை விட 100 மடங்கு வேகத்தில் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ
vaikoo
author img

By

Published : Jan 25, 2021, 9:04 PM IST

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மூலகொத்தளத்தில் உள்ள மொழி போர் தியாகி தாளமுத்து நடராஜன் நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக சார்பில் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.சேகர், திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேப் போல் விருகம்பாக்கத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தலைமையிலான நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ’மொழிப்போர் தியாகிகளின் தியாகம் வீண் போகக்கூடாது. முன்பை விட 100 மடங்கு வேகத்தில் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தி மொழி பேசுபவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு நான்கு தலைநகரங்கள் தேவை எனும் மம்தாவின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாளை விவசாயிகளோடு நாங்களும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ’இன்றும் இந்தி திணிப்பு, சமஸ்கிருத மயமாதல் தொடர்கிறது. பாராளுமன்ற மேலவையில் 70 விழுக்காடு அனைத்து கோப்புகளும் இந்தியில் உள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கும் அறிக்கைகள் கூட இந்தியில்தான் உள்ளது. மறைமுகமாகவும், நேர்முகமாகவும் இன்னும் பல்வேறு தளங்களில் வழியாகவும் இந்தி திணிப்பு நடைபெற்று வருகிறது.

vck thirumavalavan
விசிக தலைவர் திருமாவளவன்

இந்து ராஷ்டிரம் எனும் செயல்திட்ட அடிப்படையில் மோடி கும்பல் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய போக்கை கைவிட வேண்டும்; இந்திய பன்முகத்தன்மையை ஜனநாயக சக்திகள் காப்பாற்ற வேண்டும். மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு ஈவு இரக்கம் இல்லாமல் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற மாட்டோம் எனப் பிடிவாதமாக உள்ளது.

நாளை நடைபெற உள்ள டிராக்டர் பேரணியை சீர்குலைக்க நினைத்தால் உலக அரங்கில் வெட்கி தலைகுனிய வேண்டிய சூழல் ஏற்படும். விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற நேர்ந்தால் மத்திய அரசே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். இன்று மாலையே 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்று நாளை போராட்டம் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும்.

மம்தா பானர்ஜி 4 இடங்களில் தலைநகரம் அமைக்கக் கூறுயிருப்பது ஏற்புடையது, அதை விசிக வரவேற்கிறது. நான்கு இடங்களில் அல்லாமல் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மட்டுமல்லாமல் மத்தியிலும் சேர்த்து 5 இடங்களில் தலைநகர் அமைக்க வேண்டும்’ என்றார்.

மூலகொத்தளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ’தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இருமொழி கொள்கைதான். எந்த வகையிலும் இந்தியை தமிழ்நாட்டில் வேர் ஊன்ற விடமாட்டோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இருக்க வேண்டும். உண்மையாகவே தமிழ் மொழிக்காக பாடுபடும் அரசு அதிமுக அரசு.

minister jeyakumar
அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவை பொறுத்தவரை தமிழை வைத்து வியாபாரம் செய்த குடும்பம். மக்கள் வரிப்பணத்தை கோடி கணக்கில் செலவழித்து செம்மொழி மாநாடு நடத்தினர். செம்மொழி மாநாட்டால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என ஒலிக்க செய்தவர் எம்.ஜி.ஆர். வாங்க பேசலாம் என்ற தலைப்பில் கொளத்தூரில் பெறப்பட்ட மனுக்களுக்கு எத்தனை தீர்வுகள் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.

தன் சொந்த தொகுதி மக்களின் குறைகளை தீர்க்க முடியாதவர் ஸ்டாலின். கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர் வானம் ஏறி வைகுந்தம் போகிற கதையாக உள்ளது ஸ்டாலினின் நடவடிக்கைகள். எவ்வித தாமதமும் இல்லாமல் கூட்டணி பேச்சுவார்த்தையை அதற்கென அமைக்கப்பட்ட குழு மேற்கொள்ளும்’ என்றார்.

ராயபுரம் தொகுதியை இரண்டு முறை காங்கிரசுக்கு அளித்ததால் தான் ஜெயகுமார் வெற்றி பெற்று விட்டார் என்கிற ஆர்.எஸ் பாரதி கருத்துக்கு பதிலளித்த அவர், ’கூட்டணி அமைத்ததால் காங்கிரசுக்கு திமுக நெருக்கடி அளிக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் வாய் மூடி இருக்கின்றனர். ராயபுரத்தில் ஸ்டாலின் என்னை எதிர்த்து போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்கமாட்டார். உச்ச நீதிமன்ற கிளை தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என்பது நமது நிலைப்பாடு’ என்றார்.

இதையும் படிங்க:குடியரசுத் தலைவர் திறந்தது வைத்தது நேதாஜி படமா நடிகர் படமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.