சென்னை மைலாப்பூர் பகுதி காரணீஸ்வரர் கோயில் தெருவில் அடுத்தடுத்து மூன்று திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி நள்ளிரவில் ஒருவர் வீடு முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, இரு நபர்கள் இணைந்து திருடியுள்ளனர்.
இதேபோல் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி காரணீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டினுள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வீட்டிலிருந்த மடிக்கணினியை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
அண்மையில் அதே காரணீஸ்வரர் கோயில் தெருவில் மூன்று நபர்கள் கள்ளச் சாவி பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து மூன்று திருட்டு சம்பவங்கள் ஒரே தெருவில் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும், இந்த மூன்று திருட்டு சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்த மைலாப்பூர் காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தக்கலை அருகே சைக்கிள் திருட்டு: குற்றவாளிக்கு வலைவீச்சு!