சென்னை சேத்துப்பட்டில் பல ஆண்டுகளாகத பிரபல தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக 8 வயது சிறுமி கடந்த 9 நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று (டிச.9) மதியம் சிறுமியின் தாய் உணவு வாங்குவதற்காக வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது.
தாயிடம் தெரிவித்த சிறுமி
அப்போது மருத்துவமனை ஊழியர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் அந்த ஊழியரைத் தாக்கி உள்ளனர். இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததால் உடனடியாக சேத்துப்பட்டு காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
சிறுமியிடம் பாலியல் சீண்டல்
இதனையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வடமாநில ஊழியரை கைது செய்தனர். இவர் கடந்த 5 வருடங்களாக இந்த மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இந்த வழக்கு கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: தாய்மொழியில் பேச தயங்கிய பெண் எம்பி, உரையாற்ற ஊக்கமளித்த சபாநாயகர்... குவியும் பாராட்டு!