ETV Bharat / state

"அன்னைத் தமிழைக் காக்க, தமிழைத் தேடி பயணத்தை தொடங்குகிறேன்" - பாமக நிறுவனர் இராமதாசு

author img

By

Published : Feb 21, 2023, 3:29 PM IST

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக தமிழைத் தேடி விழிப்புணர்வுப் பரப்புரைப் பயணத்தை பாமக நிறுவனர் ராமதாசு தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழை தேடி நான் போகிறேன்

சென்னையில் தமிழைத் தேடிய பரப்புரை பயணத்தை தொடங்கிய பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், "தமிழை எங்கே போய் தேடுவது, தமிழை எங்கேயாவது பார்த்தீர்களா, தமிழை நாங்கள் தொலைத்து விட்டோமே, யாரை கேட்டாலும் நாங்கள் பார்க்கவில்லை என்று தான் சொல்கிறீர்கள். அதனால் தான் இப்படி ஒரு தலைப்பை நான் கொடுத்தேன்.

நான் தமிழை தேடி மதுரை வரை செல்கிறேன். குமரிக்கும் போக வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தேட வேண்டும். சிலவற்றை தேடினால் கிடைக்கும், சிலவற்றை தேடினாலும் கிடைக்காது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழை தேடி நான் போகிறேன் என்று சொல்வதை விட நாம் அனைவரும் செல்கிறோம்.

தமிழ் என்றும் நிலைத்து நிற்கும் என்று நம்புகிற அனைவரும் அனைவருடைய உள்ளங்களும் என்னோடு மதுரை வரை வர இருக்கிறது. அந்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றி. இன்று உலக தாய் மொழி தினம், ஆனாலும் இன்று தமிழ் எங்கே இருக்கிறது. தமிழ் இங்கே இருக்கிறது, அங்கே இருக்கிறது, இந்த தோட்டத்தில் பார்த்தேன், அந்த தோட்டத்தில் பார்த்தேன், அந்த அரசாணையில் பார்த்தேன், பள்ளிக்கூடத்தில் பார்த்தேன் என்று யாராவது சொன்னார்கள் என்றால் அவர்களுக்கு 5 கோடி பரிசு அளிக்கிறேன். தலையை அடமானம் வைத்தாவது கொடுக்கிறேன்.

தமிழை நான் பார்த்தேன் என்று யாராலும் சொல்ல முடியாது, அப்படி சொன்னார்கள் என்றால் பொய் சொல்கிறார்கள் என்று தான் அர்த்தம். அதனால் தான் துணிந்து நான் 5 கோடி என்று சொல்கிறேன். தமிழ் என்னை பொன் சிரிப்போடு அழைக்கிறது. தமிழ் நம் தாய்மொழி, அதே நேரத்தில் நான் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. தமிழை பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வோம்.

கற்பழிப்பு என்ற வார்த்தையை தூக்கிப் போட்டுவிட்டு பாலியல் வன்கொடுமை என்று அறிமுகப்படுத்தினோம். இதுபோல் ஆயிரக்கணக்கான வார்த்தைகளை அறிமுகப்படுத்தினோம். உலகத்திலேயே முதல் இசை தமிழிசை. ஆங்கிலம் உலகத்தில் உள்ள எல்லா மொழிகளையும் அது கடன் வாங்கியுள்ளது அது ஒரு கலப்பு மொழி. ஆங்கிலம் எல்லா மொழிகளிலும் நுழைந்து இருக்கிறது. நம்முடைய மொழியில் அதிகமாக நுழைந்து இருக்கிறது. தொலைபேசியில் பேசும் போது கூட ஹலோ என்று கலந்துள்ளது.

நாம் சொல்லி கொடுத்து இருக்கிறோம், வணக்கம் ஐயா கடைசியில் முடிக்கும் பொழுது தேங்க்யூ மூன்று வார்த்தையில் நன்றி என்று சொல்லக்கூடாதா? நம் வாயில் நுழையக்கூடாதா? ஆகவே இனி நீங்கள் ஹலோ, தேங்க்ஸ் என்று யாரும் சொல்லக்கூடாது. அம்மா, அப்பாவை மம்மி, டாடி என்று கூறுகின்றனர். அனைத்து மொழிகளிலும் தொன்மையான மொழி தமிழ் மொழி. அதை தொலைத்து வருகிறோம் என்று சொல்வதா? அல்லது தொலைத்து விட்டோம் என்று கூறுவதா?.

தமிழை கலப்பு இல்லாமல் பேசி பழகுங்கள். நான் ஒரு வார்த்தை தெரியாமல் ஆங்கிலத்தில் பேசி விட்டால் 1000 ரூபாய் எனக்கு நானே தண்டம் வைத்து கொள்கிறேன். நீங்களும் அது போன்று ஏதாவது வைத்து கலப்பு இல்லாமல் தமிழை பேசுங்கள். சுந்தர தெலுங்கில் பேசுகிறவர்கள் தெலுங்கில் பேசுங்கள். ஆங்கிலத்தில் கலக்காதீர்கள். தமிழ் பேசினால் உனக்கு தங்க காசு. நாங்கள் அப்படியும் தமிழர் வளர்க்க முடியுமா என்று முயன்றும் அதனால் தான் இந்த பயணம் தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணம். இதுவே ஒரு சிறிய வெற்றி" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: உலக தாய்மொழி தினம்: 'தமிழ்' என 500 பேருக்கு டாட்டூ வரைந்து உலக சாதனை முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.