Medical College Inauguration: தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், அரியலூர், திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் மத்திய அரசின் நிதியில் கட்டப்படவை. முன்னதாக மாநிலங்களில் 37 அரசு மருத்துவக்கல்லூரிகள் மூலம் 5 ஆயிரத்து 125 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளால், ஆயிரத்து 450 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
இந்த மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி, விருதுநகரில் விழாவில் பங்கேற்று தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இன்று (ஜன 12) மாலை, டெல்லியில் இருந்தவாரே, பிரதமர் மோடி காணொலி வாயிலாக மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைக்கிறார்.
மேலும், இந்திய பாரம்பரியம், செம்மொழிகள் ஆகியவற்றை மேம்படுத்தி பாதுகாக்கும் பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில், சென்னையில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகுப்பு - அரசை குறை கூறுவதா? - அமைச்சர் சக்கரபாணி