சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றுசூழலை மேம்படுத்தும் வகையில் மாநகரில் உள்ள 16 மேம்பாலங்களின் 108 தூண்களில் பில்லர் பூங்காக்களை 8 கோடி ரூபாய் செலவில் சென்னை மாநகராட்சி அமைத்து பராமரித்து வருகிறது.
மாநகரப் பகுதிகளில் அதிகளவில் ஏற்படும் மாசைக் குறைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட இந்த பில்லர் பூங்காக்கள் வணிக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் வசம் பராமரிக்கும் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
![சென்னை மாநகராட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-piller-garden-script-image-7209208_22032022140408_2203f_1647938048_1102.jpg)
காற்று மாசுவை மாநகர பகுதியில் குறைக்க ஏற்படுத்தப்பட்ட இவ்வகையான பூங்காக்கள் முறையான பராமரிப்பின்றி காய்ந்து போய் கிடக்கின்றன. சென்னை தி.நகர் ஜி.என் செட்டி பாலத்தின் கீழ் அமைக்கப்பட்ட பூங்கா, அடையாறு பாலம் உள்ளிட்ட பாலத்தின் கீழ் அமைக்கப்பட்ட பூங்காகளில் உள்ள செடிகளுக்கு நீர் முறையாக ஊற்றாமல் காய்ந்து போய் கிடக்கின்றன. மேலும் செடிகளே இல்லாமல் வெறும் தொட்டி மட்டும் உள்ள சுழலும் அங்கு காணமுடிகிறது.
![சென்னை மாநகராட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-piller-garden-script-image-7209208_22032022140408_2203f_1647938048_549.jpg)
பசுமையை அதிகரிக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த திட்டம் பராமரிப்பின்றி உள்ளதாகவும், சென்னை மாநகராட்சி இதனை கவனத்தில் கொண்டு முறையாக பராமரிக்க வேண்டும் எனச் சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
![சென்னை மாநகராட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-piller-garden-script-image-7209208_22032022140408_2203f_1647938048_851.jpg)
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா கட்டுப்பாடு - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை