பின்னர் இதுகுறித்து மயிலாப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வடசென்னை மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன், தமிழ்வாணன் சசி பாபு உள்ளிட்ட பத்து பேரை மயிலாப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியால்தான் சமீபகாலமாக பெரியார் சிலைகளுக்கும் அவரது புகழுக்கும் களங்கம் ஏற்பட்டு வருவதாகவும், அதன் காரணமாகவே அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்ததாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு - எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றம்