திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும், இந்து முன்னேற்றக் கழக தலைவருமான கே.கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு சாலைகளில் சிலைகளை வைத்து வழிபட மக்கள் தயாராகி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் காரணமாக கரோனா பரவல் மீண்டும் ஏற்படாத வகையில், நிலையான செயல்பாட்டு விதிகளை வகுக்க வேண்டுமென ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபியிடமும் மனு கொடுத்தேன். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
எனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான விதிகளை வகுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி... 509 பேர் கரோனாவால் உயிரிழப்பு!