சென்னை: கொரட்டூர் விஓசி தெருவை சேர்ந்த பிரேம் என்பவர் தனது வீட்டின் வாசலில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அன்று அதிகாலை யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் சைடு லாக்குகளை உடைத்து திருடி சென்றுள்ளனர்.
இருசக்கர வாகனம் திருட்டு போனது தொடர்பாக சமூக வலைதளம் மூலம் அவர் புகார் அளித்துள்ளார். இருசக்கர வாகனத்தை நபர் திருடும் சிசிடிவி காட்சி பதிவுகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீட்டின் வாசலில் பூட்டப்பட்டிருந்தாலும் பைக்குகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு, இந்த பதிவை வெளியிட்டு எச்சரிக்கை செய்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையம்: கார் பார்க்கிங் டோக்கன் பெறுவதில் சிரமம்