ETV Bharat / state

என்னுயிர் தம்பி பேரறிவாளனின் விடுதலை மனநிறைவை தருகிறது- சீமான் - சட்டப்போராட்டம்

என்னுயிர் தம்பி பேரறிவாளனின் விடுதலை மனநிறைவை தருகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன்  விடுதலை : நீதியமைப்பின் மீதான எளிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது - சீமான் அறிக்கை!

author img

By

Published : May 18, 2022, 4:26 PM IST

சென்னை : ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைதண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை வழங்கியுள்ளது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, “31 ஆண்டுகால நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு என்னுயிர் தம்பி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. காலதாமதமாக வழங்கப்பட்ட நீதி என்றாலும் இந்த நாட்டின் நீதியமைப்பின் மீதான எளிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறைக்கூடங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் போராட்ட மேடைகளுக்கும் நடந்து நடந்து தேய்ந்த அம்மா அற்புதம்மாளின் பொற்பாதங்கள் இனியேனும் ஓய்வெடுக்கட்டும். சிறகொடிந்த பறவையாய் இளமையைச் சிறைகொட்டடியில் தொலைத்த தம்பி பேரறிவாளனின் வருங்காலமாவது தாயின் அரவணைப்பில் வசந்தமாகட்டும்.

பேரறிவாளன்  விடுதலை : நீதியமைப்பின் மீதான எளிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது - சீமான் அறிக்கை!
பேரறிவாளன் விடுதலையை வரவேற்று சீமான் அறிக்கை!

தமிழ்நாடு அரசு தம்பி பேரறிவாளனுக்குக் கிடைத்துள்ள விடுதலையை முன்மாதிரியாக கொண்டு ராஜிவ் வழக்கில் சிறையில் வாடும் மீதமுள்ள அறுவரையும் விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக சட்டப் போராட்டத்தைத் தொடங்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Perarivalan Release: பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சியளிக்கிறது - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.