ETV Bharat / state

ஆர்.கே. நகரில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் பேரணி

சென்னை: ஆர்.கே. நகரில் உள்ள கருமாரியம்மன் நகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பேரணியாக சென்று ஆர்.கே. நகர் ஹெச் 6 காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர்.

Rally
author img

By

Published : Jul 24, 2019, 7:48 AM IST

சென்னை ஆர்.கே. நகரில் உள்ள கருமாரியம்மன் நகரில் 17 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் இன்னும் சீர்செய்யப்படாமல் மோசமான நிலையில் உள்ளதாகவும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக உள்ளதாகவும் அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர்.

இந்தச் சாலையை சீர் செய்து தருவதற்காக மாநகராட்சி அலுவலர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் பேரணியாகச் சென்று ஆர்.கே. நகர் ஹெச் 6 காவல்நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜிடம் மனு கொடுத்தனர்.

பொதுமக்கள் பேரணி

மனுவை பெற்றுக்கொண்ட ஆய்வாளர், இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

Intro:சென்னை ஆர்கே நகரில் சாலைகளை சீர் செய்து தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர்.Body:சென்னை ஆர் கே நகரில் உள்ள கருமாரியம்மன் நகரில் 17 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் இன்னும் சீர் செய்யாமல் சாலைகள் மோசமான நிலையில் உள்ளதாகவும் இச்சாலையில் சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் நடந்து செல்வதற்கு கூட மிகவும் ஆபத்தான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது எனவும் இந்தச் சாலையை சீர் செய்து தருவதற்காக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் அவர்களிடமிருந்து எந்த விதமான நடவடிக்கையும் இல்லை எனக்கூறி CPIM,DYFI,AIDWA மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணியாக சென்று ஆர்கே நகர் H6 காவல்நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜ் இடம் மனு கொடுத்தனர் மனுவை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைத்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார் இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.Conclusion:சென்னை ஆர்கே நகரில் சாலைகளை சீர் செய்து தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.