ETV Bharat / state

யோகி பாபு பட விநியோகஸ்தர் தரப்பினரை கடத்திய தயாரிப்பாளர் - 5 பேர் கைது

சினிமா விநியோக அலுவலகத்தில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி இரண்டு ஊழியர்களைக் கடத்தி சென்று ரூ.70 ஆயிரம் பறித்துச் சென்ற, இரு வழக்கறிஞர்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

யோகி பாபு பட விநியோகஸ்தர் தரப்பினரை கடத்திய தயாரிப்பாளர்

author img

By

Published : Dec 7, 2022, 6:07 PM IST

சென்னை: சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் மதுராஜ்(39). இவர் விருகம்பாக்கம் ஏவி.எம் அவென்யூ 2ஆவது தெருவில் ஏ.டி.எம் என்ற பெயரில் சினிமா விநியோகம் செய்யும் நிறுவனத்தை, கடந்த இரண்டு மாதங்களாக நடத்தி வருகின்றார்.

கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியான ஷூ திரைப்படத்தின் விநியோகம் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் உரிமத்திற்காக, தயாரிப்பாளர் கார்த்திக் என்பவரிடம் ரூ.1.10 கோடி ஒப்பந்தம் செய்து அதில் ரூ.17 லட்சம் முதல் தவணையாக மதுராஜ் கொடுத்துள்ளார்.

மீதமுள்ள ரூ.98 லட்சத்தை இரண்டு தவணை முறையில் மதுராஜ் கொடுத்துவிடுவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், மனைவியின் பிரசவ சிகிச்சைக்காக கடந்த மாதம் 30ஆம் தேதி மதுராஜ் அவசரமாக மதுரைக்கு சென்றதால், பணம் கொடுக்க காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி தனது அடியாட்கள் 10 பேருடன் மதுராஜின் அலுவலகத்தில் புகுந்த தயாரிப்பாளர் கார்த்திக், ஊழியர்கள் கோபி மற்றும் பென்சர் ஆகிய இருவரையும் தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் தாம்பரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்துப் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர்களின் ஏ.டி.எம் கார்டிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு, ‘காவல் நிலையத்திற்கு சென்றால் கொன்று விடுவோம்’ என மிரட்டி இருவரையும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு அந்த கும்பல் சென்றதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து நேற்று மதுரையில் இருந்து வந்த மதுராஜூக்கு தெரியவரவே, அவர் பாதிக்கப்பட்ட ஊழியர்களான கோபி மற்றும் பென்சரை தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை எடுக்காததால், பென்சர் மட்டும் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதையடுத்து உடனடியாக இது குறித்து மதுராஜ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தயாரிப்பளார் கார்த்திக் மீதுபுகார் அளித்தார்.

புகாரின் பேரில் அலுவலகத்திற்குள் புகுந்து கடத்தலில் ஈடுபட்ட, வண்டலூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் நாகராஜ், வினோத்ராஜ், கல்லூரி மாணவர் சொக்கலிங்கம், ரவுடி பிரசாந்த் ஆகியோர் உட்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

மேலும் தயாரிப்பாளர் கார்த்திக்கையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதுமட்டுமின்றி காணாமல் போனதாக கூறப்படும் பென்சரின் செல்போன் எண்ணின் முகவரியை வைத்து, தனிப்படை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பார்வதி நாயரின் முன்னாள் ஊழியர் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.