ETV Bharat / state

ரெம்டெசிவிர்  வாங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குவிந்த மக்கள் - people flocked to the kilpauk

ரெம்டெசிவிர் மருந்து வாங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

ரெம்டெசிவர் மருந்து வாங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குவிந்த மக்கள்

author img

By

Published : Apr 27, 2021, 8:57 PM IST

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால், மருத்துவமனையில் ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்துகள் என அனைத்தும் பற்றாக்குறையாக உள்ளது.

ரெம்டெசிவிர் மருந்து வாங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குவிந்த மக்கள்

எனவே, மருத்துவமனைகளில், மருந்துகளை எழுதிக்கொடுத்து வெளியிலிருந்து மருந்துகளைப் பெற்றுவரச் சொல்கின்றனர். தற்போது, வெளிச்சந்தை, மருந்தகங்களில் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருந்து கொடுக்க சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இதில் நோயாளி ஆதார் கார்டு, நோயாளி கரோனா அறிக்கை, வாங்குபவர்கள் ஆதார் கார்டு, சிடி ஸ்கேன் ஜெராக்ஸ் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆறு மருந்துகள் ஒருவருக்கு அதிகபட்சமாக அளிக்கப்படுகிறது.

நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். அனைத்துப் பகுதிகளிலும் மருந்து கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாமதிக்காமல் மதுக்கடைகளை மூடுங்கள்- ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.