ETV Bharat / state

மெரினாவில் பேனா நினைவுச்சின்னத்துக்கு அனுமதி கிடைக்குமா?: இன்று இறுதி முடிவு?! - சுற்றுச்சூழல் அமைச்சகம்

சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி கோரியது தொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்று முடிவெடுக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Pen monument
பேனா நினைவுச்சின்னம்
author img

By

Published : Apr 17, 2023, 3:35 PM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை போற்றும் விதமாக, அவரது நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் கடலுக்குள், பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. 134 அடி உயரத்தில், பேனா சின்னத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. அப்போது மீனவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நினைவுச்சின்னம் அமைக்கக்கூடிய இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டலப் பகுதிகளில் வருகிறது. மேலும் பேனா பீடம், நடைபாதை, நிலத்தடி அருங்காட்சியகம் ஆகியவற்றை அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் (CRZ) அனுமதியும் அவசியம். இதற்கிடையே, நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் (TNSCZMA) ஒப்புதல் அளித்த நிலையில், இறுதி அனுமதிக்காக சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும், கடலோர ஒழுங்குமுறை மண்டலப் பகுதியில் ஆமைகள் உட்பட அனைத்து கடல் உயிரினங்களும் மணல் நிறைந்த பகுதிகளுக்குச் செல்ல தெளிவான பாதையை எளிதாக்குவதற்கு எந்த தூண்களும் அமைக்கப்படக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆமைகள் முட்டையிட கடற்கரைக்கு வரும் நேரத்தில், கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என்றும், கட்டுமானப்பணியின்போது வெளிச்சம் இருக்கக் கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

கடலில் நினைவுச்சின்னம் அமைப்பதால் மீனவ சமூகம் பாதிக்கப்படாது என அரசு அதிகாரிகள் கூறி வரும் நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு குறித்து கவலை தெரிவித்தனர். இந்நிலையில் பேனா நினைவிடம் அமைப்பதற்கான இறுதி அனுமதியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு (இஏசி) இன்று முடிவு செய்கிறது.

இதையும் படிங்க: உஷார்... தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு இயல்பைவிட அதிகரிக்கும் வெப்பநிலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.