ETV Bharat / state

"பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும்" - பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் திட்டவட்டம்! - teachers hunger strike

Chennai Teachers Protest: பகுதி நேர ஆசிரியர்களுக்கு முழு நேரப்பணி வழங்கும் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி கடந்த செப்.25ஆம் தேதி முதல், தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

10வது நாளாக தொடரும் பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 5:44 PM IST

10வது நாளாக தொடரும் பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம்

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் போன்ற 8 பிரிவுகளில், சுமார் 12 ஆயிரம் பேர் 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் வேண்டி, பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், பணிகள் நிரந்தரம் செய்யப்படாமல், அவர்களின் தொகுப்பூதியத்தில் மட்டுமே உயர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகப் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தினர், மீண்டும் பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 10-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுப்படடு வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சேசுராஜா கூறும்போது, "12 கல்வியாண்டுகளாக, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 16 ஆயிரத்து 459 பகுதி நேர ஆசிரியர்கள் முறையான நியமனத்தில், மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் வகையில் உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகிய பாடப்பிரிவுகளில் ரூபாய் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறோம்.

12 ஆண்டாகப் பணி நிரந்தரப்படுத்த பலமுறை கோரிக்கை மற்றும் போராட்டங்கள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தனர். ஆனால் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் கடந்தும், அதனை நிறைவேற்றவில்லை. கடந்த போராட்டத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுடன் பிஎப், இஎஸ்ஐ போன்றவையும் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் அப்படி எதுவும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு முழு நேரப் பணி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். அந்த கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். அது வரையில் தொடர்ந்து காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் எங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுத்தாலும், நாங்கள் செல்ல மாட்டோம். எங்களின் கோரிக்கை பணி நிரந்தரம் பெறுவது மட்டுமே. வேலைக்குச் செல்லாவிட்டால், சம்பளம் இல்லை எனக் கூறி பிடித்தம் செய்தாலும், நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தஞ்சை அருகே 40 ஆண்டுகால இடரை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.