சென்னை: தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) நேற்று(டிச.5) சென்னையை அடுத்துள்ள பரந்தூரில் பசுமை விமான நிலையத்திற்கான அறிக்கையைத் தயாரிக்க ஆலோசகர்களுக்கு ஒப்பந்தம் கோரியது.
"டிட்கோ, கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கான முன்மொழியப்பட்ட மேம்பாட்டு மாதிரிக்கான ஒப்பந்த செயல்முறை நிர்வாகத்தை நடத்துவதற்கும் சட்டரீதியான அனுமதிகளைப் பெற, உதவுவதற்கும், விரிவான தொழில்நுட்ப-பொருளாதார அறிக்கையைத் தயாரிப்பதற்கும் ஆர்வமுள்ள ஆலோசகர்களிடமிருந்து முன்மொழிவுகளை கூறியுள்ளது என டிட்கோ டெண்டரில் குறிப்பிட்டுள்ளது.
முதற்கட்டமாக டிட்கோ அலுவலகத்தில் டிசம்பர் 20ஆம் தேதி முன்கூட்டிய கூட்டம் நடைபெறும். இதில் ஆர்வமுள்ள ஆலோசகர்களுக்கு அரசின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து டிட்கோ அதிகாரிகள் விளக்கமளிப்பார்கள் எனவும், முன்மொழிவுகளை சமர்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 6 ஆம் தேதி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நாளில் மாலையில் ஏலம் விடப்படும் என தெரிவித்துள்ளது.
TIDCO தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலோசகர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் மற்றும் ஒப்பந்த காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும் என கூறியுள்ளது. சென்னைக்கு பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பல கூட்டங்களை நடத்தி மாநில அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
பரந்தூரில் இரண்டாவது விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என கிராம மக்களுடன் இணைந்து பல அரசியல் கட்சிகளும் அரசை வலியுறுத்தி, சமீபத்தில் கிராமங்களில் நடத்தப்பட்ட கிராமசபை கூட்டங்களில் கூட விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும், இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் கொண்டு வருவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பரந்தூர் விமான நிலையம்; லாபத்தில் பங்கு..! தமிழ்நாடு தகவல் ஆணையம் பரிந்துரை