சென்னை: தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு வரும் ஜூன் மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது எம்.பி.க்களாக உள்ள 6 பேரின் பதவிக்காலம் வரும் 29ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இதையடுத்து, அந்தப் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. திமுகவிற்கு 4 எம்.பி. பதவிகளும், அதிமுகவிற்கு 2 எம்.பி. பதவிகளும் கிடைக்கும். திமுகவின் 4 எம்.பி. பதவிகளில் ஒரு இடத்தை கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு ஒதுக்கியது. திமுக தனது மூன்று வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது.
அதேபோல் அதிமுகவில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களையும் அக்கட்சி தலைமை நேற்று(மே 25) அறிவித்தது. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில், காங்கிரஸ் எம்.பி பதவியைப் பெற மூத்தத் தலைவர்கள் ப.சிதம்பரம், கே.எஸ். அழகிரி இடையே போட்டி ஏற்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் இதுதொடர்பாக டெல்லியில் முகாமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சீன விசா மோசடி குற்றச்சாட்டு - சிபிஐ முன் ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்