ETV Bharat / state

சென்னை அருகே விபத்தில் பலியான ஓட்டுநருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு - குரோம்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் பலி

சென்னை அருகே விபத்தில் பலியான ஓட்டுநருக்கு 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, வாகன உரிமையாளருக்கு பணியாளர் இழப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு இழப்பீடு-பணியாளர் இழப்பீட்டு ஆணையம் உத்தரவு

author img

By

Published : May 29, 2022, 8:10 AM IST

சென்னை: பம்மலைச் சேர்ந்த பொன்னழகி என்பவருக்கு சொந்தமான காரின் டிரைவராக குரோம்பேட்டையைச் சேர்ந்த லோகராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 2019 நவம்பர் 6ஆம் தேதி தாம்பரம் புழல் புறவழிச்சாலையில் கள்ளிக்குப்பம் அருகில் நடந்த விபத்தில் லோகராஜ் மரணமடைந்தார்.

பணியின் போது இறந்த லோகராஜ்க்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி லோகராஜின் தாய் பானுமதி சென்னை பணியாளர் இழப்பீட்டு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த பணியாளர் இழப்பீட்டு ஆணையம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்க அனுமதித்த கார் உரிமையாளர், 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, விபத்து நடந்த நாளில் இருந்து 12 சதவீதம் வட்டியுடன் 30 நாட்களில் ஆணையத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழுக்கு நவீன தொழில்நுட்ப ஸ்மார்ட் கார்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.