ETV Bharat / state

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை - விரைவில் முடிக்க உத்தரவு - சென்னை மாவட்ட செய்திகள்

பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான கலந்தாய்வை விரைவில் நடத்தி மாணவர்கள் சேர்க்கையை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்பப் கல்விக் கழகம் அறிவித்துள்ளது.

aicte
aicte
author img

By

Published : Jul 14, 2021, 12:16 PM IST

சென்னை:அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் பி.இ.,பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகள் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கு 2021-22 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

பல்கலைக் கழகங்கள் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு ஆண்டு தோறும் அளிக்கப்படும் அங்கீகார அனுமதியை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். மாணவர்களுக்கான முதல்கட்ட காலந்தாய்வினை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

தொழில்நுட்ப படிப்புகளில் ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். தொழிற்படிப்புகளுக்கு 2ஆம் கட்ட கலந்தாய்வை அக்டோபர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

மேலும் அக்டோபர் 25ஆம் தேதி முதலாமாண்டு வகுப்புகளை தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மாணவர்கள் சேர்க்கை குறித்து அனைத்துப் பணிகளையும் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கரோனா தொற்றுக் காரணமாக தேர்வுகளை நடத்துவது குறித்து வெளியிடப்படும் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

வகுப்புகளை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமோ தொடங்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கல்வி ஆண்டிற்கான கால அட்டவணை சுகாதார அமைச்சகம், கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது.

முறையான அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்க்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளது.

இதையும் படிங்க: இனி தாய்மொழியில் பொறியியல் படிக்கலாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.