சென்னை: சட்டப்பேரவையில் இன்று (மே.6) வினாக்கள் விடைகள் நேரத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம், "முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விளையாட அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைத்து தர இந்த அரசு முன்வருமா " என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், "சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான விடுதியில் பேட்மிட்டன் மைதானம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், விரைவில் நவீன உடற்பயிற்சி கூடம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு விரைவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் முதல் மூன்று இடங்களுக்கு வரக்கூடிய உறுப்பினர்களுக்குப் பரிசாக அவர்களின் தொகுதியில் ஒரு விளையாட்டு மைதானம் கட்டித் தரப்படும்" என தெரிவித்தார்.