சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் காவலர் குடும்ப சுயதொழில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அவர் பேசுகையில், "சென்னையில் பணிப்புரிந்து வரும் காவலரின் குடும்பப் பெண்கள் சுயமாக தொழில் புரியும் வகையில் தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் மூலம் தைக்கக்கூடிய துணிகள் கேன்டின் போன்ற இடங்களில் பயன்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் சிசிடிவி கேமராக்கள் இயங்குகிறதா என 10 நாள்களுக்கு ஒருமுறை கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நிர்பயா நிதியின் கீழ் கூடுதலாக சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையின்போது அரசு அறிவித்த விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: திருடுபோன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர்