தமிழ்நாடு அரசு மே ஆறாம் தேதி முதல் 20ஆம் தேதிவரை அரசுப் பேருந்து, ஆட்டோ, கால்டாக்சி உள்ளிட்டவற்றில் 50 சதவிகித பணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மே 6 ஆம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயிலில் 50 சதவிகித இடங்களில் மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் இருக்கைகளில் எக்ஸ் (X) குறியிட்ட இருக்கைகளை தவிர்த்து மற்ற இடங்களில் பயணிகள் அமருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்படாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெட்ரோ ரயில் ரயில்களிலும், அனைத்து ரயில் நிலைய வளாகங்களிலும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுவதாகவும், இதனை பின்பற்றாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.