ETV Bharat / state

Omni bus strike: இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது - தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு! - todays news

விடுமுறையை முடித்துவிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இன்று பயணம் செய்ய உள்ள நிலையில், இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Omni bus strike
"இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது" தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 7:26 AM IST

சென்னை: நீண்ட விடுமுறையை முடித்துவிட்டு மக்கள் வேலை பார்க்கும் இடத்திற்குச் செல்ல உள்ள நிலையில், இன்று மாலை 6 மணி முதல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகளின் கூட்டமைப்பு சார்பில் திடீர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் இல்லாத போதிலும் அரசுக்கும், பயணிகளுக்கும் பாதிக்காத வண்ணம் சங்கங்களே கட்டணம் நிர்ணயம் செய்து, கடந்த 2022 செப்டம்பர் மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்டணம் ஒப்புதல் பெற்று, அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி கொண்டிருக்கிறோம்.

ஆனால், கடந்த 10 நாட்களாக அண்ணாநகர் சரக இணை ஆணையர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரும், சங்கங்களுடன் இணைந்து சங்கங்கள் நிர்யணயித்த கட்டணத்திற்கு மிகாமல் கண்காணித்து, இன்று வரை அதிக கட்டணம் புகார் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தன.

ஆனால் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தவறு செய்யாமல் இயங்கிக் கொண்டிருந்த 120 ஆம்னி பேருந்துகளை, அதிக கட்டணம் என்ற பெயரில் ஆணையரின் தவறான வழிகாட்டுதலின்படி சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளை மீண்டும் சிறைபிடிப்பதை நிறுத்தக் கோரி இன்று (அக்.24) மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது. 1 லட்சத்திற்கும் மேலாக பயணிகள் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துதுள்ளனர்.

அவர்களை போக்குவரத்து துறை சார்பாக வழியில் இறக்கி விடுவதை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து சங்கங்களும் இணைந்து வேறு வழியில்லாமல் இந்த முடிவை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 3 நாளில் 8,000 சிறப்பு பேருந்துகள்.. 4 லட்சம் பேர் பயணம்.. 25ஆம் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கம்: டிஎன்எஸ்டிசி!

வார இறுதி விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடுமுறைக்காக பலரும் சென்னை போன்ற நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குச் சென்றனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், போக்குவரத்துத் துறை அதிகாரிகள், 2,092 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்தும், 119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்த நிலையில், ரூ.36.95 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். மேலும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால், தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

பலரும் ஊர் திரும்ப பேருந்துக்கு முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 119 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறை பிடித்துள்ள நிலையில், அதனை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செங்கம் அருகே கார் - அரசுப் பேருந்து மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.