ETV Bharat / state

பூனையை காப்பாற்ற முயன்று 30அடி கிணற்றில் விழுந்த முதியவர் - old man fell into the 30feet well in chennai

சென்னை: பூனையை காப்பாற்ற முயன்றபோது 30அடி ஆழம்கொண்ட கிணற்றில் தவறிவிழுந்த முதியவரை, தீயணைப்பு வீரர்கள் போராடி உயிருடன் மீட்டுள்ளனர்.

Old person
Old person
author img

By

Published : Jun 11, 2020, 8:47 PM IST

சென்னை அமைந்தகரை அய்யாவு காலனியில் வசித்துவருபவர் பி.என். டயர்ஸ் (80). ஓய்வுபெற்ற பேராசிரியரான இவர், குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருக்கு வளர்ப்பு பிராணிகள் மீது அதிக பாசம் என்பதால் அதற்கு தினமும் உணவு அளித்து வருவது வழக்கம்.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 10) இவர் வளர்க்கும் பூனை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்கு பின்புறம் இருந்த 30அடி ஆழம்கொண்ட கிணற்றில் விழுந்தது. இதனைக்கண்ட டயர்ஸ், உடனடியாக அருகிலிருந்த சிறிய ஏணியில் கயிறுகட்டி கிணற்றுள் ஏணியை இறக்கினார்.

ஏணியை பூனை பிடித்துக்கொண்டதும் கயிற்றை மேலே தூக்கி, பூனையை உயிருடன் காப்பாற்றியுள்ளார். ஆனால், ஏணியை எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக டயர்ஸ் நிலைத்தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார்.

முதியவரை பத்திரமாக மீட்கும் தீயணைப்புத் துறை வீரர்கள்

அப்போது இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், உடனடியாக கீழ்ப்பாக்கம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்துவந்த ஆறு பேர் கொண்ட தீயணைப்புத் துறையினர், முதியவர் விழுந்த 30அடி கிணற்றுக்குள் தீயணைப்பு வீரர் ஒருவரை கயிறுடன் இறங்கி, சுமார் ஒருமணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு முதியவரை உயிருடன் மீட்டனர்.

இதையும் படிங்க:பூனையை தூக்குமேடைக்கு ஏற்றிய டிக் டாக் விரும்பி; சிறையில் உணவளித்த போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.