சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "நீட் தேர்வு கவுன்சிலிங்கில் எந்த தாமதமும் ஏற்படாது அதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்யும். நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக அகில இந்திய மருத்துவ தேர்வு மையத்தை தான் கேள்வி கேட்க வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அரசின் நிலைப்பாடு.
கமல்ஹாசனை பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிஆர்ஓவாகத்தான் பார்க்கிறேன். கடந்த ஆறு மாதமாக எங்கேயோ ஒளிந்து விட்டு இப்போது வந்தவுடன் முதலமைச்சர் வேட்பாளராக வருகிறார், அவருக்கு மக்களைப் பற்றிய கவலை எல்லாம் இல்லை.
ராஜபக்சே இனத் துரோகி, முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை அவரின் ரசிகர்கள் விரும்பவில்லை, தமிழர்களுக்கு எதிராக இருந்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பாதிப்பு வரும் என்பதால் தான் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இதுகுறித்து மத்திய அரசிடம் கேட்டு சட்டம் இயற்றி கொண்டுவரவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவன் சாதனை; நீட் வேண்டாம் எனச் சொன்னவர்களுக்குப் பதிலடி!