ETV Bharat / state

இரவு ஊரடங்கால் அரசு விரைவுப் பேருந்து சேவை பாதிப்பு - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: இரவு ஊரடங்கால் அரசு விரைவுப் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை செயலர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இரவு ஊரடங்கால் அரசு விரைவுப் பேருந்து சேவை பாதிப்பு

author img

By

Published : Apr 21, 2021, 3:31 PM IST

சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, போக்குவரத்து துறை செயலர் சமயமூர்த்தி இன்று (ஏப்ரல்.21) பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 45 வயது நிரம்பிய பணியாளர்களுக்கு பணிமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒரு ஓட்டுநர் அல்லது நடத்துனருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால், தோராயமாக 400 முதல் 500 பேருக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் 45 வயதுக்கு மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 70 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் 25,450 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 37 விழுக்காடு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு படிப்படியாக தடுப்பூசி செலுத்தப்படும். இந்தப் பணி 2 வார காலத்தில் முடியும்.

போக்குவரத்து தொழிலாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட மாட்டாது. பேருந்துகளில் பயணிகள் ஏறுவதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு சுத்திகரிக்கப்படுகிறது. பயணிகள் ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சில இடங்களில் பயணிகள் முகக்கவசம் கூட அணிவதில்லை, இது குறித்து கேட்டால் நடத்துனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இரவு ஊரடங்கால் அரசு விரைவுப் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஏப்ரல்.21) தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 16,284 பேருந்துகள் இயக்கப்பட்டன. 350 அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பொதுவாக 80 விழுக்காடு அரசு விரைவுப் பேருந்துகள் இரவு நேரத்தில் இயக்கப்படுகின்றன.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 2,790 பேருந்துகள் இயக்கப்பட்டன. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக போக்குவரத்துத் துறைக்கு நாளொன்றுக்கு தோராயமாக 12 முதல் 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்... வாசலில் காத்திருக்கும் கரோனா நோயாளிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.