இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் "e-learn.tnschools.gov.in" என்ற இணையதளத்தை அணுகி பாடங்களைக் கற்கலாம்.
அதில் 1ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்புவரை உள்ள ஒவ்வொரு பாடத்திற்கும் தலைப்பு வாரியாக மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வரையில் குறுகிய காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் 1ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரையிலான தமிழ், ஆங்கில வழியில் அந்தந்த பிரிவுகளுக்கேற்ப பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் வழிக்கல்வி முறையினை சீரான முறையில் ஒழுங்குப்படுத்த பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் ஆய்வு செய்துவருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமெரிக்கா பல்கலை.யில் ஆன்லைன் பட்டய படிப்பு முடித்த தமிழ் மாணவர்!