சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ் மாெழியில் தகுதிப் பெற்றால் மட்டுமே பணியில் கலந்துகொள்ள முடியும் என அறிவித்தது. மேலும் தமிழ் மாெழியில் 40 மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே தகுதிப் பெற்றர்களாகவும் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தது.
இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் முந்தைய ஆண்டு பழைய பாடத் திட்டத்தில் பொது ஆங்கிலப் பாடம் இடம்பெற்றது. அரசு கொண்டுவந்துள்ள புதிய மாற்றத்தின் அடிப்படையில் குரூப்-4 தேர்வில் பொது ஆங்கிலப் பாடம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பழைய பாடத்திட்டத்திலிருந்து புதிய பாடத்திட்டம் எவ்வாறு மாறுபடும் என்பதைச் சுட்டிக்காட்ட பழைய பாடத்திட்ட முறை இணையதளத்தில் இணைக்கப்பட்டிருந்தது. பொது ஆங்கிலப் பாடம் மீண்டும் கொண்டுவரப்பட்டதா என்கிற குழப்பம் தேர்வர்களுக்கு ஏற்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலர் ஒருவர் கூறும்போது, "இணையதளத்தில் இடம்பெற்ற பாட்டத்திட்டம் நீக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக புதியதாக பொதுத் தமிழ், பொது அறிவு ஆகிய பாடங்கள் மட்டுமே இடம்பெறும்.
மேலும் தமிழ் மாெழியில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தகுதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொள்குறி வகையில் (ஒ.எம்.ஆர்) முறையில் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். புதிய பாடத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள்: 8 வாரங்களில் அகற்ற உத்தரவு