ETV Bharat / state

குற்றவழக்குத் தொடர்வு துறை இயக்ககம், சட்டக்கல்வி இயக்ககத்திற்கு ரூ.32.93 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம்!

author img

By

Published : Oct 20, 2022, 6:15 PM IST

குற்றவழக்குத் தொடர்வு துறை இயக்ககம் மற்றும் சட்டக்கல்வி இயக்ககத்திற்கு 32.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

new
new

சென்னை: குற்ற வழக்குத் தொடர்வு துறை இயக்ககம் மாநிலத்திலுள்ள தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தலைமை குற்றவியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளைத் திறம்பட நடத்துதல் மற்றும் அரசு குற்றவியல் வழக்கு நடத்துனர்களின் பணித்திறனை கண்காணித்தல் போன்றவற்றின் மீது முழுக்கட்டுப்பாடு செலுத்தும் இயக்ககம்.

சட்டக்கல்வி இயக்குநரகம் மாநிலத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளின் கல்வி மேம்பாடு மற்றும் செயல்பாடுகளை நிர்வகிக்கும் இயக்குநரகம். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குற்ற வழக்குத் தொடர்வு துறை இயக்ககம் மற்றும் சட்டக்கல்வி இயக்ககங்களுக்கு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மில்லர் சாலையில் 1.18 ஏக்கர் நிலப்பரப்பில் 87,091 சதுர அடி பரப்பளவில் 32.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம் கட்டப்படவுள்ளது.

இக்கட்டடத்தின் தரை தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், மின்தூக்கிகள் போன்றவைகளும், குற்ற வழக்குத் தொடர்வு துறை இயக்கக கட்டிடத்தில் முதல் தளத்தில் இயக்குநர் அறை, பார்வையாளர் அறை, கலந்துரையாடல் அறை, அலுவலகப் பிரிவு, எழுத்துமனு பிரிவு, தகவல் அறியும் சட்டப் பிரிவு, கணினி அறை, பதிவக அறை போன்றவைகள் அமைக்கப்படவுள்ளன.

இரண்டாம் தளத்தில் நூலகம், காத்திருப்புக் கூடம், இணை இயக்குநர் அறைகள், கணினி அறை, கலந்துரையாடல் அறை, மின்னணு வழி வழக்குப்பிரிவு, மூன்றாம் தளத்தில் மாட அமைப்பிலான கூட்ட அரங்கம் (Gallery type Auditorium), சேவை அறை போன்றவைகள் அமைக்கப்படவுள்ளன.

மேலும் சட்டக்கல்வி இயக்கக கட்டிடத்தின் முதல் தளத்தில் ஆலோசனைக்கான காத்திருப்பு இடம், பதிவறை, பொருட்கள் வைப்பறை. இரண்டாம் தளத்தில் காணொளி கூட்டரங்கு, காத்திருப்புக் கூடம், அலுவலகப் பிரிவு, நூலகம், கணினி அறை, பதிவக அறை. மூன்றாம் தளத்தில் பயிற்சிக் கூடங்கள் போன்றவை அமைக்கப்படவுள்ளன.

குற்ற வழக்குத் தொடர்வு துறை இயக்ககம் மற்றும் சட்டக்கல்வி இயக்ககத்திற்கான ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, குற்ற வழக்குத் தொடர்வு இயக்குநர் சித்ரா தேவி, சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.