இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வேலையிழந்து பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களை இலவசமாக வழங்கியது.
மத்திய அரசு பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ அரிசி, பருப்பு, கோதுமை ஆகிய பொருட்கள் மே மாதம் முதல் ஜூலை வரை தொடர்ந்து 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் 80.89 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்தனர்.
அதன் பிறகு தொற்று பாதிப்பு குறைந்ததால் அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்தது. தற்போது அடுத்த தாக்குதலாக இந்தியாவில் கரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்த தொற்று மேலும் தீவிரமெடுத்தால் இந்தியாவில் முழு ஊரடங்கு விதிக்கப்படுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமானது 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்தின் கீழ் அரிசி உட்பட அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் வழங்கப்படவேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்ட அறிவிப்பு பொங்கலில் வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
இதையும் படிங்க : நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு