ETV Bharat / state

நீட் தேர்வு இட ஒதுக்கீட்டை பாதிக்காது - பாஜக

நீட் தேர்வு இட ஒதுக்கீட்டை பாதிக்கும் என்பது தவறான கருத்து எனத் தமிழ்நாடு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு இட ஒதுக்கீட்டை பாதிக்கிறது என்பது தவறு - தமிழ்நாடு பாஜக!

author img

By

Published : Feb 21, 2022, 2:35 PM IST

சென்னை: நீட் தேர்வு இட ஒதுக்கீட்டைப் பாதிக்கிறது, சமூக நீதிக்கு எதிராக உள்ளது என்ற உண்மைக்குப் புறம்பான கருத்துகளைத் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் பேசுவது தவறானது என மருத்துவப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களுடன் பாஜக தெரிவித்துள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வினால் இட ஒதுக்கீடு பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து தவறான தகவலைத் தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகள் கூறிவருவது நாம் அறிந்ததே.

ஆனால், உண்மையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் அதிகமாகியிருக்கின்றன என்பதை அரசின் புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

கடந்தாண்டு, அரசு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 757 (27%) கிடைத்த இடங்கள் 1340 (47.8%), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 560 (20%) கிடைத்த இடங்கள் 694 (24.8%),பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 84 (3%) கிடைத்த இடங்கள் 119 (4.2%) கிடைத்துள்ளன.

சிறுபான்மையினருக்கு அதிக இடங்கள்

எஸ்.டி வகுப்பினருக்கு (ST) ஒதுக்கப்பட்ட இடங்கள் 29 (1%) கிடைத்த இடங்கள் 29(1%), எஸ்.சி அருந்ததியினருக்கு (SCA) ஒதுக்கப்பட்ட இடங்கள் 84 (3%), கிடைத்த இடங்கள் 85(3%),எஸ்.சி (SC) சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 421(15%) கிடைத்த இடங்கள் 431(15.4%), பொதுப் பிரிவினருக்கு (OC) ஒதுக்கப்பட்ட 869 (31%)இடங்களில், முற்பட்ட வகுப்பினர் என்று பலரால் அழைக்கப்படும் இட ஒதுக்கீடு இல்லாத வகுப்பினருக்குக் கிடைத்த இடங்கள் 107(3.8%)..

இந்த வருடம் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள கலந்தாய்வின் முதல் சுற்றின் ஒதுக்கீட்டின் படி பொதுப் பிரிவு உள்ளிட்ட மொத்தமுள்ள 7254 இடங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BC)3437 (47.38%) இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (MBC)1834 (25.28%) இடங்களும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு (BCM) ஒதுக்கப்பட்ட 342 இடங்கள் (4.71%) இடங்களும், எஸ்.சி (SC) வகுப்பினருக்கு 1116 (15.38%) இடங்களும், அருந்ததியினருக்கு (SCA) 209 (2.88) இடங்களும், எஸ்.டி வகுப்பினருக்கு 72 (0/99) இடங்களும் கிடைத்துள்ளன.

பொது பிரிவினருக்கு 244 இடங்கள்

முற்பட்ட வகுப்பினர் என்று பலரால் அழைக்கப்படும் எழுபதிற்கும் மேற்பட்ட, சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு இல்லாத வகுப்பினருக்கு ஒட்டுமொத்தமாக 244 இடங்கள் (3.36%) மட்டுமே கிடைத்துள்ளன.

மேலும், வழக்கம் போல், இந்த ஆண்டும் பொதுப் பிரிவுக்கென (OC) ஒதுக்கப்பட்டுள்ள 2249 (31%) இடங்களில் அதிகமாகப் பயன்பெற்றது 27% இட ஒதுக்கீடுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC)தான் (47.38%) என்பதை அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

நிலைமை இவ்வாறிருக்க, 'நீட் தேர்வு இட ஒதுக்கீட்டைப் பாதிக்கிறது, சமூக நீதிக்கு எதிராக உள்ளது' என்ற உண்மைக்குப் புறம்பான கருத்துகளைத் தமிழ்நாட்டில்உள்ள கட்சிகள் பேசுவது தவறானது. நீட் தேர்வினால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக அளவில் பயன்பெறுகின்றனர் என்பதைத் தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரங்களே வெளிப்படுத்தும் நிலையில்.

இனியும், மாணவர்களை நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா என்ற பதட்டத்தில் வைப்பது நியாயமல்ல. திரைமறைவில் உள்ள தனியார்ப் பள்ளிகள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவான 'நீட் தேர்வு' அரசியலைக் கைவிட்டு, நீட் தேர்வைக் கொண்டு சிறப்பான மருத்துவர்களை உருவாக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:மாணவி உயிரிழப்புக்கு முதலமைச்சரிடம் முறையிடுவேன் - வானதி சீனிவாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.