சென்னையை அடுத்த ஆலந்தூர் நாடார் சங்க திருமண மாளிகையில் நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த நாடார் சமுதாய சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் தா. பத்மநாபன் தலைமை தாங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பத்மநாபன், “கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் கொச்சைப்படுத்திப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஆர்.எஸ். பாரதி தன் பேச்சிற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனக் கோரிய பிறகும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் சென்னையில் வருகிற நவம்பர் மாதம் 1ஆம் தேதி ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
மேலும் வருத்தம் தெரிவிக்கும் வரை காந்திய வழியில் தொடர் அறப்போராட்டங்கள் நடத்தவும் தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொய் மூட்டையில் சவாரி செய்பவர்கள் பாஜகவினர் - அமைச்சர் மனோ தங்கராஜ்