ETV Bharat / state

முரளிதரன் பயோபிக் விவகாரம்: ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சிகள் இல்லை! - 800 படத்தில் அரசியல் கிடையாது

muttiah-muralitharan-biography-has-no-politics-film-production-company

author img

By

Published : Oct 14, 2020, 7:33 PM IST

Updated : Oct 14, 2020, 11:06 PM IST

19:23 October 14

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் '800' என்ற படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. 

இதனிடையே முதலில் நான் ஒரு இலங்கையன், பிறகே தமிழன் என்று வசனம் பேசி 800 படத்தில் விஜய் சேதுபதி கூறுவாரா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஈழ ஆதரவாளர்களும் விஜய்சேதுபதி இப்படத்தில் நடிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அரசியல் கிடையாது என அப்படத்தை தயாரிக்கும் டார் மீடியா தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.  

அதில், ''முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம். 800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழ்நாட்டில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையம்சம்.

இத்திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளைக் கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். இத்திரைப்படத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது. கூடுதலாக இத்திரைப்படத்தில் இலங்கையை சேர்ந்த பல தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெற இருக்கின்றனர்.

அதன்மூலம் இலங்கைத் தமிழ் திரைத்துறை கலைஞர்களுக்கு தங்கள் திறமையை உலக அரங்கில் வெளிக்காட்ட இந்த படம் நிச்சயமாக ஒரு அடித்தளமிட்டு தரும் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். கலைக்கும் கலைஞர்களுக்கும் எல்லைகள் கிடையாது. எல்லைகளை கடந்து மக்களையும் மனிதத்தையும் இணைப்பதுதான் கலை. நாங்கள் அன்பையும் நம்பிக்கையும் மட்டுமே விதைக்க விரும்புகிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இதுபோன்ற சாதிய வன்கொடுமையை ஒரு போதும் ஏற்க முடியாது - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

Last Updated : Oct 14, 2020, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.