அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சேதான் என்று கமல்ஹாசன் பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் முஸ்தபா, தலைமை தேர்தல் அலுவலரிடம் புகார் மனுவை இன்று அளித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பகுதியில் இடைத்தேர்தல் பரப்புரையின்போது சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று பேசியுள்ளார். அங்கு முஸ்லீம்கள் அதிகம் வாழ்கின்றனர்.
இந்தச் பேச்சு, இந்து முஸ்லீம் மதத்தினரிடையே மோதலை உருவாக்கும். தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கமலின் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மேலும், அந்தக் கட்சியையும் தடை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.