ETV Bharat / state

அண்ணா பல்கலை.யில் மதிப்பெண் சான்றிதழ் கொள்முதலில் 20 கோடிக்கும் மேல் வீண்செலவு

அண்ணா பல்கலைக் கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ்கள் கொள்முதலில் 24.50 கோடி ரூபாய் வீண் செலவு ஆகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Oct 20, 2022, 4:04 PM IST

Etv Bharatமதிப்பெண் சான்றிதழ் கொள்முதலில் 20 கோடிக்கும் மேல் வீண்

சென்னை: அண்ணாப் பல்கலைக் கழகத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு பெற்றதில் 24.50 கோடி ரூபாய் வீண் செலவு செய்யப்பட்டுள்ளது என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் சான்றிதழ்களுக்கு மேல் 80 மடங்கு அதிகமாக வெற்றுச்சான்றிதழ்கள் வாங்கியதால் சான்றிதழ்கள் வீணாகியுள்ளன. மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களின் வடிவம் தற்போது மாற்றப்பட்டதால் 2016-17ல் கொள்முதலான சான்றிதழ்கள் பயன்படுத்த முடியாமல் வீணாகி உள்ளது.

மாணவர்களின் சான்றிதழ்களை டிஜிட்டல் வடிவில் மாற்றுவது மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பட்டம் உள்ளிட்ட சான்றிதழ்களுக்காக வாங்கப்பட்ட தேவைக்கு அதிகமான வெற்றுச்சான்றிதழ்கள் முறைகேட்டால் அண்ணாப் பல்கலைக்கழகத்திற்கு இரண்டு ஒப்பந்தங்களிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 35 கோடியே 90 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தகுதியற்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம்:அண்ணாப் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத்துறை அலுவலராக செயல்பட்ட உமா முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரது காலத்தில் மாணவர்களுக்கான சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தகுதியற்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தங்களை அளித்ததன்மூலம் 11 கோடியே 41 லட்சம் ஒரு ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்கு தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய மாணவர்களின் சான்றிதழ்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 720 ஆக இருந்த நிலையில், 20 லட்சத்து 92 ஆயிரத்து 35 சான்றிதழ்கள் டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டதாக போலியாக கணக்கு காட்டப்பட்டு தனியார் நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரச்சான்றிதழ், தற்காலிகச்சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், பட்டயச் சான்றிதழ் ஆகியவற்றை அச்சிடுவதற்காக வாங்கப்பட்ட வெற்று சான்றிதழ்களிலும் முறைகேடுகள் நடந்திருப்பதை கணக்கு தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெற்றுச் சான்றிதழ்கள்: அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு தேவைப்படும் 17 லட்சத்து 15 ஆயிரத்து 441 சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரு கோடியே 63 லட்சத்து 30 ஆயிரம் வெற்றுச்சான்றிதழ்கள் 57 கோடி ரூபாய்க்கு அச்சிடப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 2021 வரை 50 விழுக்காடு சான்றிதழ்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது சான்றிதழ்களின் வடிவத்தை மாற்றியதால், 24.50 கோடி ரூபாய் மதிப்புள்ள வெற்றுச்சான்றிதழ்களை தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேவைக்கு ஏற்ப வெற்றுச்சான்றிதழ்களை அச்சிட்டிருந்தால் இந்த பெரும் இழப்பினைத் தவிர்த்திருக்க முடியும் என்றும்; கணக்கு தணிக்கை துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் சான்றிதழ்களை டிஜிட்டல் மயம் ஆக்குவதில் நடைபெற்ற முறைகேடு மற்றும் தேவைக்கு அதிகமான வெற்றுச் சான்றிதழ்களை முறைகேடாக வாங்கியதால் அண்ணாப் பல்கலைக்கழகத்திற்கு 35 கோடியே 90 லட்சம் ரூபாய் ஒட்டுமொத்தமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது என கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உணவுப்பாதுகாப்பு அலுவலர் எனக்கூறி வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறிக்கமுயன்ற நபர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.