ETV Bharat / state

தமிழ்நாட்டில் 34 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது! - கரோனா இரண்டாம் அலை

தமிழ்நாட்டில் இதுவரை 34 லட்சத்து 87 ஆயிரத்து, 36 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
கரோனா தடுப்பூசி
author img

By

Published : Apr 10, 2021, 1:45 AM IST

சென்னை: நாட்டில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை 34 லட்சத்து 84 ஆயிரத்து 36 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக 1,36,667 நபர்களிடமிருந்து, 2 கோடியே 88 லட்சத்து 90 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவிட்-19 சார்ந்த பழக்கங்களான (COVID Appropriate Behaviour) முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், தகுந்த இடைவெளி ஆகியவைகளை மீண்டும் கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை அளிக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் இதுவரை, தடுப்பு நடவடிக்கை விதிகளை மீறியதாக 1,36,667 நபர்கள் கண்டறியப்பட்டு , அவர்களிடமிருந்து 2,88,90,600 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8 ஆம் தேதி வரையில், 4லட்சத்து 58 ஆயிரத்து 969 சுகாதாரப் பணியாளர்கள், 5 லட்சத்து 61 ஆயிரத்து 531 முன்களப் பணியாளர்கள், 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய் உள்ள 9லட்சத்து 21 ஆயிரத்து 50 நபர்கள், 45-59 வயதிற்குட்பட்ட இணை நோய் இல்லாத 70ஆயிரத்து 216 நபர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11லட்சத்து14 ஆயிரத்து 270 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை தடுப்பூசியை 2,12,517 சுகாதாரப் பணியாளர்கள், 81,685 முன்களப் பணியாளர்கள், 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய் உள்ள 25,804 நபர்கள், 45-59 வயதிற்குட்பட்ட இணை நோய் இல்லாத 100 நபர்கள், 60 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 40,894 நபர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இதுவரை 31,26,036 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி, 3,61,000 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என மொத்தம் 34,87,036 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:”கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றினால் முழு ஊரடங்கு தேவை இருக்காது” - முதலமைச்சர் பழனிசாமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.