மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு குறித்த புள்ளிவிவர தகவலில் தெரிவித்திருப்பதாவது:-
"தமிழ்நாட்டில் உள்ள 29 ஆய்வகங்களில் 24 ஆயிரத்து 621 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழ்நாட்டிலிருந்த 2,094 நபர்கள், வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு திரும்பிய 80 நபர்கள் என மொத்தம் 2,174 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 7 லட்சத்து 37 ஆயிரத்து 787 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 50 ஆயிரத்து 193 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. அவர்களில், தற்போது 21 ஆயிரத்து 990 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சையின் மூலம் குணமடைந்த 842 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 27 ஆயிரத்து 624 நபர்கள் குணமடைந்துள்ளனர்.
மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 48 பேர் இன்று உயிரிழந்தனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 576ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,276 நபர்களுக்கு நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை சென்னையில் 35 ஆயிரத்து 556 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16,067 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் இதுவரை 461 பேர் உயிரிழந்தனர்.
மாவட்டம் வாரியாக இன்று கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை
- சென்னை மாவட்டம்- 35,556
- செங்கல்பட்டு மாவட்டம்- 3,271
- திருவள்ளூர் மாவட்டம் - 2,037
- காஞ்சிபுரம் மாவட்டம் -864
- திருவண்ணாமலை மாவட்டம் -816
- கடலூர் மாவட்டம் -645
- திருநெல்வேலி மாவட்டம்- 522
- மதுரை மாவட்டம் - 493
- தூத்துக்குடி மாவட்டம் -487
- விழுப்புரம் மாவட்டம் -478
- அரியலூர் மாவட்டம் -397
- ராணிப்பேட்டை மாவட்டம் -381
- கள்ளக்குறிச்சி மாவட்டம் -354
- சேலம் மாவட்டம் -256
- திண்டுக்கல் மாவட்டம் -249
- வேலூர் மாவட்டம் -194
- ராமநாதபுரம் மாவட்டம் -194
- கோயம்புத்தூர் மாவட்டம் -187
- தஞ்சாவூர் மாவட்டம் -183
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் -179
- நாகப்பட்டினம் மாவட்டம் -179
- விருதுநகர் மாவட்டம் -168
- தேனி மாவட்டம் -164
- திருவாரூர் மாவட்டம் -163
- தென்காசி மாவட்டம் -162
- பெரம்பலூர் மாவட்டம் -148
- கன்னியாகுமரி மாவட்டம் -130
- திருப்பூர் மாவட்டம் -116
- கரூர் மாவட்டம் -103
- நாமக்கல் மாவட்டம் -92
- ஈரோடு மாவட்டம் -73
- புதுக்கோட்டை மாவட்டம் -71
- சிவகங்கை மாவட்டம் -65
- திருப்பத்தூர் மாவட்டம் -43
- கிருஷ்ணகிரி மாவட்டம் -44
- தருமபுரி மாவட்டம் -30
- நீலகிரி மாவட்டம் -22
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் -231
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் -108
- ரயில் மூலம் வந்தவர்கள் -33