ETV Bharat / state

அசதியில் தூங்கிய தொழிலாளர்களிடம் பணம், செல்போன் திருட்டு - Theft of 24 thousand rupees from Northern workers in Anna arch

கட்டிட வேலை செய்து விட்டு அங்கேயே தூங்கிய வடமாநில தொழிலாளர்களிடம் இருந்து ரூ.24 ஆயிரம் ரொக்கம், 4 செல்போன் திருட்டு போனது தெரியவந்தது.

வேலை செய்து விட்டு அசதியில் தூங்கிய தொழிலாளர்களிடம் பணம், செல்போன் திருட்டு..

author img

By

Published : Mar 14, 2022, 9:30 AM IST

சென்னை அண்ணா ஆர்ச் துரைசாமி தெருவைச் சேர்ந்தவர் கோவிந்த குமார், இவருடன் பல வட மாநிலத் தொழிலாளர்கள் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச்12) இரவு ஓட்டேரி கண்ணப்பன் தெருவில் சுமார் 30க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கட்டிட வேலை செய்து வந்துள்ளனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு அங்கேயே வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை எழுந்து பார்த்தபோது அவர்கள் வைத்திருந்த சுமார் ரூ.24 ஆயிரம் ரொக்கம், 4 செல்போன் திருட்டு போனது தெரியவந்தது.

ஓட்டேரி காவல் நிலையம்
ஓட்டேரி காவல் நிலையம்

இதுகுறித்து, கோவிந்த குமார் ஓட்டேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலம் வந்த ரயிலில் கட்டுக் கட்டாகப் பணம், நகைகள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.