2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட நடவடிக்கையாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் வரும் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை நான்கு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, இன்று கட்சிக்கு புதிய பொறுப்புகளையும் அதற்கான நிர்வாகிகளையும் நியமித்து அதனை கமல் ஹாசன் அறிவித்துள்ளார். அதன்படி,
- பத்மப்ரியா - மாநில செயலாளர் சுற்றுப்புறச்சூழல் அணி
- வைத்தீஸ்வரன் - மாநிலச் செயலாளர் பொறியாளர் அணி
- சையத் சயிஃபுதீன் மற்றும் வினோத் - மாநில செயலாளர் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு
- அருணாச்சலம் - மாநிலச் செயலாளர் தலைமை நிலைய பரப்புரையாளர்
- ரமேஷ் மற்றும் சதீஷ் - மாநில துணைச் செயலாளர் தலைமை நிலைய தரவுகள் மற்றும் ஆய்வு
- சண்முகராஜன் மற்றும் சுந்தரம் - மாநில துணைச் செயலாளர் தரவுகள் மற்றும் ஆய்வுகள்
- பிரகாஷினி - துணை செயலாளர் தலைமை நிலைய அலுவலக நிர்வாகம்
- ராஜேந்திரன் - மக்கள் தொடர்பாளர்
என்ற புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நான் பி டீம் இல்ல; ஆறு வயதிலிருந்தே ஏ டீம் - கமல்ஹாசன் ட்வீட்