முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலமாக அவரைத் தொடர்புகொண்டு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அதன் பின்னர், தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி வருமாறு: "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்!
அவரது தொலைநோக்குப் பார்வையுடனான தலைமையும், எதிர்காலத் திட்டங்களும் உலகளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்த காரணமாயிருந்தன. மக்களுக்குத் தொடர்ந்து ஆற்றிவரும் சேவைக்கு நன்றி. நல்ல உடல்நலமும் மகிழ்ச்சியும் பெற்றிட வாழ்த்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.