ETV Bharat / state

விவசாய கடன் ஊழல் விவகாரம் சிபிஐ விசாரணை தேவை - மு.க. ஸ்டாலின்

சென்னை: பிரதமரின் பெயரிலான விவசாய நிதி உதவியிலும், வீடு கட்டும் திட்டத்திலும் ஊழல் செய்துள்ள அதிமுக ஆட்சியாளர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி, நியாயமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

stalin
stalin
author img

By

Published : Sep 7, 2020, 4:31 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதம மந்திரியின், விவசாயிகளுக்கான ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தொகையை, விவசாயிகளுக்கு வழங்காமல், போலியானவர்களுக்கு வழங்கி, பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்து 700 பேரை, விவசாயிகள் என்று போலியாகக் கணக்குக் காட்டி, பிரதமரின் திட்டத்தில் நான்கு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பது தெரியவந்ததால், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில், போலி விவசாயிகள் கணக்கில் சூறையாடப்பட்ட பிரதமர் நிதியிலிருந்து 4 கோடியே 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 4 கோடியே 50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மோசடிப் புகார்கள் எழுந்துள்ளன.

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவித் திட்டத்தில் மட்டுமல்ல, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியிலும் மாபெரும் ஊழல் நடந்தது பற்றி சில வாரங்களுக்கு முன் ஆதாரப்பூர்வமான செய்திகள் வெளியாயின.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் தலையாமங்கலத்தில், ஏறத்தாழ 150 வீடுகள் கட்டப்பட்டதாகப் பொய்க் கணக்குக் காட்டி, பயனாளிகள் பெயரில், தலா ஒன்றே முக்கால் லட்ச ரூபாய் என்ற வகையில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.

ஊழலை ஒழிக்க வந்தவர் பிரதமர் மோடி எனப் பெருமை பேசிக்கொண்டே, அதிமுகவினரின் ஊழலை மறைத்து, அரசியல் லாபம் தேடும் போக்கை மேற்கொண்டால் ஊழல் ஒழிந்துவிடுமா அதிமுகவின் ஊழல்களுக்கு உடந்தையாக இருக்கிறதா பாஜக? என்கிற கேள்வி, பாமர மக்களின் மனதிலும் எழுகிறது; அந்தக் கேள்வி, அப்படியே நின்று வளரும் தன்மை கொண்டது.

பிரதமரின் பெயரிலான விவசாய நிதி உதவியிலும், வீடு கட்டும் திட்டத்திலும் அப்பட்டமாக ஊழல் செய்துள்ள அதிமுக ஆட்சியாளர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி, நியாயமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.