ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்றும் நடைபெறும் குட்கா விற்பனை: இது மாநிலத்திற்கு தலைகுனிவு - மு.க. ஸ்டாலின் பளீர்! - Gutka case hc order

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் குட்கா விற்பனை நடைபெறுவது மாநிலத்திற்கு தலைகுனிவு என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குட்கா விற்பனை இன்னும் நடைப்பெறுவது தமிழகத்திற்கு தலைகுனிவு - ஸ்டாலின்

author img

By

Published : Aug 25, 2020, 2:11 PM IST

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து, சட்டப்பேரவை ஜனநாயகத்தை சென்னை உயர் நீதிமன்றம் காப்பாற்றி இருக்கிறது.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும், மக்களை வெகுவாகப் பாதிக்கும் பிரச்னைகளையும், சட்டப்பேரவையில் எழுப்பும் உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்றத் தவறி விட்டாலும், சென்னை உயர் நீதிமன்றம் அந்த உரிமையை சட்டப்பூர்வமாகப் பாதுகாத்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது.

மேலும் குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிய அமைச்சர் மீது, முதலமைச்சர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், இன்னும் குட்கா விற்பனை தங்கு தடையின்றி நடந்து கொண்டிருக்கிறது என்பதும் கசப்பான உண்மை மட்டுமல்லாமல், அது தமிழ்நாட்டிற்கும் தலைகுனிவு ஆகும்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...திமுகவினர் மீதான குட்கா வழக்கு: உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.