சட்டபேரவையில் 2022-2023ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரை வழங்கபட்டு வரும் நிலையில் முன்னதாக நேரம் இல்லா நேரத்தின் போது அமைச்சர் பேசிய எ.வ. வேலு பேசினார்.திமுக ஆட்சி பொறுப்பேற்று 8 மாதத்தில் தமிழகத்தில் நடைபெற்று வந்த சாலை விபத்துகளில் 15 சதவிகித விபத்துகள் குறைந்திருப்பதாக தெரிவித்தார்.
இனி சாலை விபத்தை தடுக்கும் தமிழ் நாட்டின் மாடலைதான் மத்திய அரசும் கடைபிடிக்க போவதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நாடாளுமன்றத்தில் பேசியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். இது தமிழ் நாட்டிற்க்கு பெருமை சேர்ந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். விபத்துகளை தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.
இதையும் படிங்க : 'பொது நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடி விடுவிப்புக்கான ரசீது மார்ச் 28ஆம் தேதியே வழங்கப்படும்' - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு