சென்னை: இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் சிறப்பு நிகழ்வாக, பெருநகர சென்னை மாநகராட்சி (GCC), சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரவைட் லிமிடெட் ஆகியவற்றின் சார்பில், "சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்" (chennai formula racing circuit) என்ற பெயரில் டிசம்பர் 9,10 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது.
-
விளையாட்டு போட்டிகளின் மூலம் சர்வதேச நாடுகளின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் ஈர்த்து வரும் நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முக்கிய முயற்சியாக சென்னையில் Chennai Formula Racing Circuit - F4 On Street Night Race நடைபெறவுள்ளது.
— Udhay (@Udhaystalin) October 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
வரும் டிசம்பர் மாதம் கோலாகலமாக நடத்தப்படவுள்ள… pic.twitter.com/Av6XibaulF
">விளையாட்டு போட்டிகளின் மூலம் சர்வதேச நாடுகளின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் ஈர்த்து வரும் நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முக்கிய முயற்சியாக சென்னையில் Chennai Formula Racing Circuit - F4 On Street Night Race நடைபெறவுள்ளது.
— Udhay (@Udhaystalin) October 13, 2023
வரும் டிசம்பர் மாதம் கோலாகலமாக நடத்தப்படவுள்ள… pic.twitter.com/Av6XibaulFவிளையாட்டு போட்டிகளின் மூலம் சர்வதேச நாடுகளின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் ஈர்த்து வரும் நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முக்கிய முயற்சியாக சென்னையில் Chennai Formula Racing Circuit - F4 On Street Night Race நடைபெறவுள்ளது.
— Udhay (@Udhaystalin) October 13, 2023
வரும் டிசம்பர் மாதம் கோலாகலமாக நடத்தப்படவுள்ள… pic.twitter.com/Av6XibaulF
இந்தியாவில் முதல் முறையாகச் சாலைகளில் நடத்தப்படுகின்ற மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவே ஆகும். சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் - F4 போட்டியானது, சென்னை மாநகரில் உள்ள தீவுத்திடல் மைதானத்திலிருந்து 3.5 கி.மீ சுற்றளவில் இரவுப் போட்டியாக (Street Circuit) நடத்தப்படுகிறது.
இந்தச் சிறப்புமிக்க போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிக்கான அறிமுகக் கூட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி நடத்தப்பட்டது.
-
திறமையாளர்களின் கனவுக்கும் - சாதனைக்கும் தடையேதும் இருக்கக் கூடாது என்பதே நம் திராவிட மாடல் அரசின் லட்சியம். குறிப்பாக, விளையாட்டுத்துறையை பொறுத்தவரை, நம் வீரர் - வீராங்கனையரின் இலக்குகளுக்கு பொருளாதாரம் உட்பட வேறு எந்த காரணங்களும் தடைக்கல்லாக இருக்கக் கூடாது என்று செயல்பட்டு… pic.twitter.com/QSMALSrYR1
— Udhay (@Udhaystalin) October 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">திறமையாளர்களின் கனவுக்கும் - சாதனைக்கும் தடையேதும் இருக்கக் கூடாது என்பதே நம் திராவிட மாடல் அரசின் லட்சியம். குறிப்பாக, விளையாட்டுத்துறையை பொறுத்தவரை, நம் வீரர் - வீராங்கனையரின் இலக்குகளுக்கு பொருளாதாரம் உட்பட வேறு எந்த காரணங்களும் தடைக்கல்லாக இருக்கக் கூடாது என்று செயல்பட்டு… pic.twitter.com/QSMALSrYR1
— Udhay (@Udhaystalin) October 13, 2023திறமையாளர்களின் கனவுக்கும் - சாதனைக்கும் தடையேதும் இருக்கக் கூடாது என்பதே நம் திராவிட மாடல் அரசின் லட்சியம். குறிப்பாக, விளையாட்டுத்துறையை பொறுத்தவரை, நம் வீரர் - வீராங்கனையரின் இலக்குகளுக்கு பொருளாதாரம் உட்பட வேறு எந்த காரணங்களும் தடைக்கல்லாக இருக்கக் கூடாது என்று செயல்பட்டு… pic.twitter.com/QSMALSrYR1
— Udhay (@Udhaystalin) October 13, 2023
அப்போது தமிழக அரசு சார்பில், இந்தப் போட்டியினை நடத்துவதற்காக 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் முதற்கட்ட தொகையாக 15 கோடி ரூபாயை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டி அமைப்பாளர்களிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களான ராஜேஷ் மற்றும் கலைச்செல்வன் ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் தலா 7.20 லட்சம் ரூபாய் மதிப்பில் செயற்கை கால்களுக்கான உபகரணங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
பின்னர், துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் இந்தாண்டு மே 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்ற 2023ஆம் ஆண்டிற்கான WAKO உலகக் கோப்பை கிக்பாக்ஸிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த பரத் விஷ்ணு (32 கிலோ பிரிவு) மற்றும் ஐந்தாம் இடம் பெற்ற கோகுலகிருஷ்ணன் மற்றும் அஷ்வின் (47 கிலோ பிரிவு) ஆகியோர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.