ETV Bharat / state

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024.. செமிகண்டக்டர் கொள்கை முதல் பல லட்சம் கோடி முதலீடு வரை - முதலீட்டாளர்கள் மாநாடு

Tamil Nadu Global Investor Meet 2024: தமிழகத்தில் இருக்கும் சூழல், உற்பத்தியாக இருந்தாலும், சேவைத்துறையாக இருந்தாலும் சிறப்பாக விளங்குகிறது. இதுவே, முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வரக் காரணம் என தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஈடிவி பாரத் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.

minister-trp-raja-said-uses-of-tamilnadu-global-investor-meet-2024
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024; தமிழ்நாடு இளைஞர்களுக்கு கிடைக்க கூடிய பயன் என்ன?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 4:32 PM IST

Updated : Jan 6, 2024, 5:53 PM IST

சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நாளை (ஜனவரி.7) தொடங்குகிறது. இதில், ஆஸ்திரேலியா மற்றும் தமிழ்நாடு உறவு காட்சிப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவிலிருந்து எக்ஸ்போ ஃபெவிலியனின் பகுதியிலிருந்து 80க்கும் மேற்பட்ட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

முதலீட்டாளர்கள் மாநாடு: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜனவரி.7) தொடங்கி வைக்கிறார். குறிப்பாக, இந்த மாநாட்டில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர்.

மேலும், 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கு கொள்வார்கள். இதில், 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் மற்றும் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நாடுகள் பங்கேற்பு? நாளை (ஜனவரி.7) தொடங்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வ பங்குதார நாடுகளாக உள்ளனர்.

மேலும், 26 அமர்வுகளில் 170க்கும் மேற்பட்ட உலகப்புகழ் வாய்ந்த பேச்சாளர்களும் இதில் பங்கு பெறுகிறார்கள். குறிப்பாக மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சோம்நாத் உள்பட தேசிய மற்றும் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை நிர்வாகிகள் என ஏராளமானோர் சிறப்புரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

என்னென்ன சிறப்புகள்? உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 450க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் குறிப்பாக, 170 உலகப் புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதுடன், தமிழ்நாட்டின் தொழில் வளத்தைக் குறிப்பிட்டுக் காட்டும் வண்ணம் அமைய உள்ளதாகவும், 26 தலைமையாளர்கள் இந்த மாநாட்டில் வரிசைப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைப்பு, பெவிலியன் பல்நாட்டின் அரங்குகள் மற்றும் STAND UP TN பெவிலியன் முதலானவை இந்த மாநாட்டில் அமைக்கப்பட உள்ளன.

இம்மாநாட்டின் முக்கிய அம்சமாக செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கை 2024 வெளியிடப்பட உள்ளது. கணினிகளில் "ஐசி"க்கள் எனப்படும் இன்டகிரேட்டட் சர்க்கியூட்டுகள் தயாரிப்பில் உலக அளவிலான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செமிகண்டக்டர்கள் தயாரிப்பு கொள்கை என்பது இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை உறுதி செய்யவும், இது சார்ந்த முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுவது என்ன? உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகமாக அளித்த தகவலின்படி, "தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களில் தொழில் செய்வதற்கும், தொழில் பூங்காக்கள் அமைக்க அனைத்து அம்சங்களும் இருப்பதால், முதலீட்டாளர்கள் தொழில் தொடங்கி வளர்ச்சி அடைய ஒரு சிறப்பான சூழலும், திறமையான மனித வளங்களும் இருப்பதால், அனைத்து மாவட்டங்களிலும் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் சர்வதேச அறைகலன் பூங்கா மற்றும் பசுமை ஹைட்ரஜன் மையம் உருவாகி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்திலும் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் காலணி தொழிற்சாலையும் துவங்கப்பட்டது. ஒரு சீரான மற்றும் முழுமையான வளர்ச்சியே தமிழக அரசினுடைய முக்கிய அம்சமாகும்.

தமிழகத்தினுடைய சிறப்புமிக்க சில துறைகள் மீது மட்டும் சார்ந்தது அல்ல. அது உற்பத்தியாக இருந்தாலும் சரி, சேவைத் துறையாக இருந்தாலும் சரி, தமிழ்நாடு சிறப்பாக விளங்குகிறது. இந்த காரணத்திற்காகத்தான் முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வர பிரதான காரணமாக இருக்கிறது.

இதுவரை தமிழகத்தில் சுமார் 3 லட்சம் கோடி முதலீடுகள் மூலம் 4 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும், இது வரக்கூடிய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையானது மிக அதிக அளவில் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்ற மாணவர்கள் எந்த ஒரு துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் அவர்கள் வல்லமை படைத்தவர்களாக உருவாக்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். மேலும், நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு உலகளாவிய நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்பொழுது சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

தொழில்துறை சார்ந்த கொள்கைகளை வடிவமைத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சிறப்பம்சம். இதில், பல்வேறு தொழில்துறை சார்ந்த கொள்கைகளை அரசு வடிவமைத்து, அதன் மூலம் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு வழிவகை செய்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை கொள்கை மூலம், வரும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.

அதன்மூலம் ஒரு லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும். நாளை நடைபெற இருக்கின்ற உலக முதலீட்டாளர்களின் மாநாடு மூலமாக, இதுவரை தொழில்துறையில் கண்டிராத நிறுவனங்கள், நம் மாநிலத்தில் இல்லாத நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதல் முதலாக அடி எடுத்து வைக்க உள்ளார்கள். நாளை நடைபெறக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரலாறு காணாத அளவில் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜன.21-இல் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு!

Last Updated : Jan 6, 2024, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.