ETV Bharat / state

CMDA: வடசென்னை வளர்ச்சிக்கு முக்கியத்துவம்.. புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்! - சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அறிவிப்பு

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

CMDA
CMDA திட்டம்
author img

By

Published : Apr 14, 2023, 7:28 AM IST

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். சட்டப்பேரவையில் அவர் அறிவித்த புதிய அறிவிப்புகள் பின்வருமாறு:-

  • திருமழிசை அருகில் குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் சர்வதேச தரத்திற்கு 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும்.
  • எண்ணூர் நெடுஞ்சாலையை ஒட்டி திருவொற்றியூர் முதல் பாரதியார் நகர் வரை சுமார் 5 கிமீ நீளமுள்ள கடற்கரை ரூ.30 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டு, வடசென்னை மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால் மேம்படுத்தப்படும்.
  • சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மாதவரம் சரக்குந்து முனையத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.30.30 கோடி நிதி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்படும்.
  • சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டி வரதராஜபுரத்தில் ஒப்பந்த பேருந்துகள் நிறுத்துமிடம் ரூ.29 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • கிழக்கு கடற்கரை சாலை நீலங்கரை முதல் அக்கரை வரை முதற்கட்டமாக 5 கிமீ நீளத்திற்கு மிதிவண்டி பாதை மற்றும் நடைபாதை சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முதல் ஊரப்பாக்கம் ஏரி வரை ரூ.17 கோடி மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்படும்.
  • கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மருத்துவ சிகிச்சை மையத்துடன் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • கேளம்பாக்கம் பேருந்து முனையத்தினுள் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்படும்.
  • பெருநகர சென்னை மாநகராட்சி உடன் இணைந்து வில்லிவாக்கம், இரட்டை ஏரி, பாடி, மற்றும் வடபழனி மேம்பாலங்களுக்கு கீழ் உள்ள இடங்கள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அழகு படுத்தப்படும்.
  • சிறுசேரியில் 50 ஏக்கர் வன நிலத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நகர்புற வனம் ஏற்படுத்தப்படும்.
  • ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் ஜூன் மாதத்தில் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும்.
  • சென்னை பெருநகர பகுதியில் மனை பிரிவுகளுக்கான திட்ட அனுமதி இணைய வழியாக வழங்கப்படும். மேலும் சென்னை பெருநகர பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாக்க மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைச் சான்றிதழ் வழங்கப்படும்.
  • சென்னை சேத்துப்பட்டில் சலவை கூட்டத்தினை ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறு வளர்ச்சி மேற்கொள்ளப்படும். ராயபுரம் மூலக்கொத்தளத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்கப்படும். கோடம்பாக்கத்தில் ஒன்றரை கிமீ நீளத்தில் புலியூர் கால்வாய் கரைகள் ரூ.5 கோடி மதிப்பில் அழகு படுத்தப்படும்.
  • சென்னையில் கொண்டி தோப்பு பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மாற்று திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும்.
  • சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவை ரூ.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.மேலும் அண்ணாசாலை, டேம்ஸ் சாலை, ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் நடை மேம்பாலம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • சென்னை கோட்டூரில் அமைந்துள்ள மாநகராட்சி விளையாட்டு தொடரில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பின் தியாகராய நகர் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். செனாய் நகர் நாலரை ஏக்கரில் மாநகராட்சி விளையாட்டு மைதானம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • சென்னை கோயம்பேட்டில் உள்ள சாலை சந்திப்பில் ரு.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைக்கப்படும். வடசென்னை காசிமேட்டில் உள்ள கடற்கரை பகுதி ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • தண்டையார்பேட்டை பேருந்து பணிமனை ரூ.25 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படும். கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பெரம்பூர் முல்லை நகர் பேருந்து நிலையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • வியாசர்பாடி கன்னிகாபுரம் விளையாட்டு திடல் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • அண்ணா நகர் மேற்கு பகுதியில் 100 அடி பிரதான சாலையில் நகரம் படிக்கட்டுக்களுடன் நடை மேம்பாலம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் நவீன சந்தை ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். திருவிகே நகர் பேருந்து நிலையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படும். பெரியார் நகர் பேருந்து நிலையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படும்.
  • ராமாபுரத்தில் 1.4 ஏக்கர் திறந்தவெளி நிலத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்படும். எண்ணூரில் அமைந்துள்ள தினசரி காய்கறி சந்தை மற்றும் சமுதாயக்கூடம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.
  • ஆவடி அண்ணனூர் கோயம்பேடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • அம்பத்தூர் பேருந்து நிலையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். பூவிருந்தவல்லி, ஆவடி நெடுஞ்சாலையில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • புழல் மகாலட்சுமி நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிய பள்ளி வளாகம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். மேலும், புழல் மேட்டுப்பாளையம் சீனிவாசன் தெருவில் கால்பந்து மைதானத்தை ஒன்றரை கோடி மதிப்பீட்டில் புணரமைக்கப்படும்.
  • முடிச்சூர் ஊராட்சியில் ரங்கா நகர் குளம் ஒன்றரை கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மேலும் முடிச்சூர் ஊராட்சியில் அமைந்துள்ள சீக்கனான் ஏரி ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • பம்மல் ஈஸ்வரி நகரில் விளையாட்டு திடல் மற்றும் பூங்கா ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். ஆலந்தூர் புது தெருவில் சமுதாய நலக்கூடம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
  • வேளச்சேரியில் மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள பகுதி ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகு படுத்தப்படும். பெரும்பாக்கத்தில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்படும். புரசைவாக்கம் சலவை கூடத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மறு வளர்ச்சி மேற்கொள்ளப்படும் என பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.

இதையும் படிங்க: 'திமுக அரசு எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின் தடை ஏற்படுகிறது' - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.